வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்… அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டதாக குற்றச்சாட்டு!!
Author: Babu Lakshmanan27 February 2024, 4:54 pm
திண்டுக்கல்லில் வருவாய்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல்லில் வருவாய்துறை ஊழியர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜான் பாஸ்டின் தலைமை வகித்தார்,
மாவட்ட செயலாளர் சுகந்தி முன்னிலை வகித்தார். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் உட்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தப்பட்டன.
இதனிடையே, அரசு ஊழியர்களை திமுக அரசு வஞ்சித்து விட்டதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.