மேல் அதிகாரிக்கு கறி விருந்து… மனு கொடுக்க வந்தவரை நிற்க வைத்து விட்டு பெண் ஆர்.ஐ செய்த செயல் : வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 March 2023, 8:49 am

தாராபுரத்தில் பொதுமக்களை கால் கடுக்க காக்க வைத்து விட்டு, மேல் அதிகாரிக்கு கறி விருந்து கொடுக்க ஆர்டர் செய்த தாராபுரம் பெண் வருவாய் அலுவலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தாராபுரம் டவுன் ஆர்.ஐ.ஆக (வருவாய் அலுவலர்) தனலட்சுமி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பொதுமக்களை பல மணி நேரம் கால் கடுக்க நிற்க வைத்து விட்டு, தனது மேல் அதிகாரியை காக்கா பிடிப்பதற்காக மட்டன் பிரியாணி, காளான் சில்லி, ஒயிட் ரைஸ், கோலா உருண்டை மட்டன் வகைகளை நல்லம்மாள் கிராமிய சமையல் கடையில் ஆர்டர் செய்து கொண்டிருந்தார்.

மனுக்களை கொடுக்க வந்த பொதுமக்களை நிற்க வைத்துவிட்டு ஆர்.ஐ. பிரியாணி ஆர்டர் போடுவதற்காக பேசி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் ஆர்.ஐ தனலட்சுமி மீது மாவட்ட ஆட்சித் தலைவர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

  • taapsee pannu said to vetrimaaran that one national award is pending for her என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…