அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்குக்கு டும்..டும்..டும்.. பெண் எம்பியை மணக்கிறார்!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2025, 6:11 pm
பிரபல கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் இடம்பெற்று அதிரடி ஆட்டம் மூலம் கவனத்தை ஈர்த்தர்.
பின்னர் டி20 தொடரில் உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விளையாட உள்ளார்.
இதையும் படியுங்க: வயசான காலத்துல அஜித்துக்கு இதெல்லாம் தேவையா? வார்த்தையை விட்ட பிரபலம் : ரசிகர்கள் ஆவேசம்!
இந்த நிலையில் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங். லெப்ட்ஹேண்ட் பேட்ஸ்மேனாக உள்ளார். 27 வயதாகும் ரிங்கு, சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார்.
பிரிய சரோஜ் வாரணாசியை சேர்ந்தவர். உத்தரபிரதேசம் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அவர், 25 வயதே ஆன இளம் எம்பி என்ற பெருமையை பெற்றவர்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை தற்போது எம்எல்ஏ ஆக உள்ளார். ஏற்கனவே மூன்று முறை எம்பியாக இருந்தவர்.