ரிங்கு சிங்குடன் என் மகளுக்கு நிச்சயதார்த்தமா…யாரு சொன்னா…பெண் எம்.பி-யின் தந்தை ஆவேசம்.!
Author: Selvan18 January 2025, 3:58 pm
மகளின் கல்யாணம் குறித்த தகவலை மறுத்த தந்தை
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன இளம் வீரர் ரிங்கு சிங்கிற்கும்,உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி சரோஜாவிற்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவின.
இந்த நிலையில் தற்போது பிரியா சரோஜினி தந்தை இதனை மறுத்து உள்ளார்.25 வயதான பிரியா சரோஜ் கடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று உத்திரபிரதேச மாநிலத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்க: மனைவிகள் இருப்பதால் இந்தியா தோற்கவில்லை.. பிசிசிஐக்கு ஹர்பஜன் சிங் கேள்வி!
இவரது தந்தை டுபானி சரோஜ் இதற்கு முன்பாக மூன்று முறை நாடளுமன்ற உறுப்பினராக இருந்து,தற்போது எம்எல்ஏ-வாக இருக்கிறார்.இந்த சூழலில் தற்போது தன்னுடைய மகளின் திருமணம் குறித்த தகவலை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகள் வேலை காரணமாக திருவனந்தபுரத்திற்கு சென்றிருப்பதாக கூறினார்.இந்த தகவல் குறித்து ரிங்கு சிங்க் தரப்பில் இருந்து எந்த ஒரு உண்மை தகவலும் வெளிவராதல்,இந்த நிச்சயதார்த்தம் ஒரு பொய்யான செய்தியாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது .