வெடித்த கலவரம்… கடலூர் முழுவதும் பேருந்து சேவைகள் நிறுத்தம் : போக்குவரத்து கழகம் உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 July 2023, 6:15 pm

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது.

பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, போலீஸார் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது.

கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி எச்சரித்தனர். பாமகவினர் கல் வீசி தாக்கியதில் போலீசார் சிலரும் காயம் அடைந்தனர். தற்போது போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்து சேவையை முழுமையாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பாமக போராட்டம் வன்முறையில் முடிந்ததை தொடர்ந்து போக்குவரத்துக் கழகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளி – கல்லூரி மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்பியதை உறுதிப்படுத்திய பிறகு சேவையை நிறுத்த போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 477

    0

    0