கோவை கொலை சம்பவத்தில் பரபரப்பு.. குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீசார்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 6:39 pm

கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இளம் வயது நபர் பலியாகினார். மற்றொருவர் பயங்கர வெட்டு காயங்களுடன் அவசர ஊர்தியில் ஏற்றி செல்லப்பட்டனர்.

5 பேர் கொண்ட கும்பல் பலத்த ஆயுதங்களுடன் நீதிமன்ற வளாகம் முன்பு பேக்கரியில் நின்று கொண்டிருந்த போது தாக்குதல் நடத்தியுள்ளது. வெட்ட ப்பட்ட இருவர் கையிலும் கத்தி போன்ற ஆயுதங்களுடன் இருந்துள்ளது . ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கோவை கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் இரண்டு பேர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.

4 பேரில் இரண்டு பேர் கையில் ஆயுதங்களுடன் தப்பியோட முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் குற்றவாளிகளான ஜோஷ்வர் மற்றும் கௌதம் ஆகியோரின் காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 430

    0

    0