முகநூலில் தனக்கு தானே RIP போஸ்டர் : இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் சிக்கிய பரபர தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 10:10 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காத்தாடிகுப்பம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் நவீன் குமார் (20) இவர் பாலிடெக்னிக் முடித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்

இதனிடையே இவர் தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் மேலும் தனது முகநூல் பக்கத்தில் எனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

மேலும் நேற்றைய தேதியிட்டு rip என ரீல்ஸ் செய்து அதையும் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் நவின் குமார் உடலை கைப்பற்றி உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்கொலை காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 367

    0

    0