சென்னை: அசானி புயலையொட்டி சென்னை, கடலூர், உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று இன்று புயலாக மாறும் என்றும், இதனால் டெல்டா மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி கடலூர், நாகை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இந்நிலையில், புயல் உருவாகுவது குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இன்று உருவாகும் புயல், ஆந்திரா மற்றும் ஓடிசா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.