72 குண்டுகள் முழங்க ஆர்எம் வீரப்பன் உடல் தகனம்.. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று CM செய்த செயல்!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 7:59 pm

72 குண்டுகள் முழங்க ஆர்எம் வீரப்பன் உடல் தகனம்.. தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று CM செய்த செயல்!

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தவர் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (வயது 98). இவர் முதுமை காரணமாக நேற்று மரணம் அடைந்தார்.

ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆரின் சினிமா பட நிர்வாகியாக இருந்த இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கினார். 1983-87 கால கட்டங்களில் பவர்புல் அமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி அம்மாள் அமைச்சரவையிலும் அதன் பிறகு ஜெயலலிதா அமைச்சரவையிலும் அமைச்சராக பணியாற்றியவர். அ.தி.மு.க.வில் இருந்து ஆர்.எம்.வீரப்பன் நீக்கப்பட்ட பிறகு எம்.ஜி.ஆர். கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

அதன் பிறகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்தார். தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டார். ஆனாலும் அவரது அரசியல் பயணம் அந்தளவுக்கு எடுபடவில்லை.

ஆர்.எம். வீரப்பன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொது மக்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் அரசியல் கட்சியினர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.எம். வீரப்பனின் உடல் இன்று மாலை 5 மணி அளவில் ஊர்வலமாக நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக தலைமைச் செயலாளர் விடுத்த செய்திக் குறிப்பில், “5 முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ள ஆர்.எம்.வீரப்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்த சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 250

    0

    0