பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற காதலி பலி… கதறிய காதலன் : மறுநிமிடமே நடந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2024, 5:39 pm
ஒரே இடத்தில் காதலன், காதலி பலி… விபத்தில் பறிபோன காதலியின் உயிரை பார்த்து கதறிய காதலன்
செங்கல்பட்டு மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் யோகேஷ்வரன், அதே வகுப்பில் படித்து வரும் மாணவி சபரீனாவை காதலித்துள்ளார்,
இருவரும் காதலித்து வந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால், இருவரும் இருசக்கர வாகனத்தில் மாமல்லபுரம் சென்றனர்.
பூஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனம் சென்று கொண்டிருந்த போது புதுச்சேசேரியில் இருந்து சென்னை நோக்கிசென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் சபரீனா நிலை தடுமாறி சாலையில் விழுந்தார். ஆனால் அவர் மீது பேருந்து ஏறியதால் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த காதலன் கதறி அழுதார். உடனே பெண் வீட்டிற்கு தகவல் சொன்ன காதலன் யோகேஷ்வரன், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த பேருந்து மீது பாய்ந்து தற்கொலை செய்தார்.
ஒரே இடத்தில் காதலன், காதலி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.