இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி விழுந்து ஏற்பட்ட விபத்தில் தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
வேலூர் சலவன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். MEDICAL REPRANSETIVE ஆக பணிபுரிந்து வரும் இவருக்கு தனலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில், தனலட்சுமி காட்பாடி அடுத்த கிருஷ்டியான்பேட்டை பகுதியில் உள்ள தான் பணிபுரிந்து வரும் பள்ளிக்கு, வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சைக்கிள் குறுக்கே வந்துள்ளது. இதில் தனலட்சுமி சென்டர் மீடியேட்டர் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார்.
அப்பொழுது ஆந்திராவில் இருந்து வேலூர் நோக்கி வந்த இலகு ரக வாகனம் நிலை தடுமாறி விழுந்த தனலட்சுமி மீது ஏறி இறங்கியுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் காட்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி காவல் நிலைய போலீசார், தனலட்சுமி உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விபத்து குறித்து அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இந்தி ஆசிரியை தனலட்சுமி ஹெல்மெட் அணிந்து இருசக்கரம் வாகனத்தை இயக்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.