அசுர வேகத்தில் சீறிப்பாய்ந்த கார்… தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
26 January 2023, 10:49 am

கன்னியாகுமரி மாவட்டம் அழகியமண்டபம் பகுதியில் அதி வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற 4 இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜாய். இவர் தனக்கு சொந்தமான ஆல்டோ காரில் இன்று மாலை காட்டாத்துறை பகுதிக்கு சென்றுள்ளார். காரை நாகர்கோவில் பகுதியை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில், காரானது நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை அழகியமண்டபம் பகுதியில் அதி வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறமாக கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் மீது மோதியதோடு, மீண்டும் வேகமாக சாலையின் நடுவே சென்று நின்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையோரம் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த ஜாய் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

விபத்து குறித்து தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், அதி வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற இருசக்கர வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

https://vimeo.com/792860378
  • anthanan on vijay fadwa statement by muslim organization விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்
  • Close menu