சாலையோர கைக்கடிகாரக் கடையில் திருட்டு : வயது முதிர்ந்த தம்பதி செய்த காரியத்த பாருங்க.. வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
10 March 2022, 10:34 am

கோவை : காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கைக்கடிகாரத்தை வயது முதிர்ந்த தம்பதி திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில், செல்போன், பழக்கடை, பேக்கரிகள் உள்ள பல்வேறு கடைகள் உள்ளன. அங்குள்ள, மலைகொழுந்து என்பவரது செல்போன் உதிரிப்பாக கடையின், முன்புறம் கைக் கடிகாரங்களை விற்பனைக்காக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் 1 மணியளவில் கடையின் அருகே பேருந்துக்காக நின்றிருந்து வயதான தம்பதி ஒருவர் நீண்ட நேரமாக அங்கேயே நின்றுள்ளனர். கடையின் உரிமையாளர் அருகே உள்ள மற்றொரு கடைக்கு சென்ற நேரத்தில், கண்ணிமைக்கும் பொழுதில் அங்கிருந்த கடிகாரத்தை முதியவர் திருடி பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

அந்த பெண் அதை பையில் போட்டுக்கொண்ட பின்பு அங்கிருந்து சென்றனர். இந்த காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

https://vimeo.com/686561371

அதை பார்த்த அங்கிருந்த மற்றொரு நபர், வயதான தம்பதியை பிடித்து சோதனை செய்த போது, அவர்கள் பையில் கடிகாரம் இருந்த நிலையில் இருவரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த வயதான தம்பதிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு, பின்னர் எச்சரித்து அனுப்பினர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?