இறந்தவர்களின் வீட்டை குறி வைக்கும் கொள்ளையன்.. இறுதிச்சடங்கு தான் டார்கெட் : மிரள வைக்கும் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan1 September 2024, 11:28 am
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோட்டசுப்பையா தெருவில் உள்ள வெங்கடேசன் என்பவர் தாயார் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.
இந்த இறுதிச் சடங்கு முடிந்து சடலத்தை எடுத்துச் செல்லும் போது உறவினர்கள் சடலத்தின் பின்னே செல்வதை அறிந்த அங்கு இருந்த முனிராஜ் என்பவர் வெங்கடேசன் வீட்டிற்குள் நுழைந்து பீரோவை திறப்பதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது
வீட்டின் உள்ளே இருந்த இரண்டு பெண்கள் கூச்சலிட்டதில் சடலத்தின் பின்னே சென்ற உறவினர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை பிடித்து குடியாத்தம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் காவல்துறை விசாரணையில் அவர் பெங்களூர் பகுதியை சேர்ந்த முனிராஜ் என்பதும் குடியாத்தத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்
இதனை தொடர்ந்து தொடர் விசாரணையில் பிடிப்பட்ட முனிராஜ் சில மாதங்களுக்கு முன் குடியாத்தம் அடுத்த நத்தமேடு பகுதியில் வெங்கடேசன் அவரது மனைவி ஆதிலட்சுமி இறந்த இறுதிச்சுடங்கு முடிந்து எல்லோரும் சடலத்தை பின்னே சென்ற போது யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள பணம் நகை திருடி சென்றது விசாரணைகள் தெரியவந்தது.
பின்னர் குடியாத்தம் காவல் துறையினர் முனிராஜியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து இறந்தவரின் வீட்டை நோட்டமிட்டு சடலத்தை எடுத்துச் செல்லும் போது திருடும் நபரால் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.