டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு கொள்ளை: பீர் பாட்டில் பெட்டிகளை அபேஸ் செய்த கொள்ளையர்கள்!!

Author: Rajesh
8 May 2022, 3:27 pm

மதுரை: விருதுநகரில் டாஸ்மாக் கடையை துளையிட்டு பல ஆயிரம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் பனைநகரில் அரசு மதுபான டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று வழக்கம்போல் மதுபான விற்பனையார் கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று திறக்க வந்து திறந்து பார்த்த போது கடையை துவாரம் போட்டு மதுபான பாட்டில்கள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து விருதுநகர் பஜார் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பல ஆயிரம் மதிப்பிலான பீர் பாட்டில் பெட்டில்கள், மற்றும் பல ரக மதுபானபாட்டில் பெட்டிகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு எதுவும் தடயம் சிக்கியுள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.

மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • AR Murugadoss about SIkandar movie remake of Thalapathy's Sarkar விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!