வழக்கறிஞர் வீட்டில் 78 சவரன் கொள்ளை… காட்டிக் கொடுத்த சிசிடிவி காட்சி.. மேற்குவங்கத்தில் வைத்து வடமாநில கொள்ளையன்!!

Author: Babu Lakshmanan
8 September 2022, 10:32 am

சென்னை ; வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையனை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 78 சவரன் நகைகளை மீட்டனர்.

சென்னை புழல் கதிர்வேடு ரங்கா அவென்யூவை சேர்ந்தவர் வழக்கறிஞர் பார்த்திபன் (38). சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இந்த 18ம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யாறில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

பின்னர், கடந்த 21ஆம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 78 சவரன் நகையும் 30 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயிருந்தது. இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ராஜாராம் மற்றும் புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம் இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், குற்றவாளி மேற்குவங்கத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், பீர்க்கும் மாவட்டம் க்ளாரோ கிராமத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த கமல் ஷேக் (19) என்பவனை தனிப்படையினர் கைது செய்தனர். பின்னர், அவனிடமிருந்து 78 சவரன் நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்து வடமாநில கொள்ளையன் கமல்சேக்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்