லாரி ஓட்டுநரை கட்டிப்போட்டு ரூ.11 லட்சம் கொள்ளை : நெடுஞ்சாலை கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!
Author: Udayachandran RadhaKrishnan15 March 2023, 12:56 pm
திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே ஓசூரில் இருந்து தென்காசி ஆலங்குளத்திற்கு தக்காளி ஏற்றி கொண்டு திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 45) என்பவரும் சதீஷ்குமாரும் (வயது 29) வந்துள்ளார்.

தக்காளி லோடை இறக்கிவிட்டு திண்டுக்கல் காமாட்சிபுரம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் வந்து லாரியை வழிமறித்து பாலகிருஷ்ணன் மற்றும் சதீஷ்குமாரை கட்டிப்போட்டு விட்டு நான்கு பேர் மற்றும் லாரியில் ஏறிக்கொண்டு லாரியை ஓட்டிக் கொண்டு வந்து வேடசந்தூர் தாலுகா விருதலைபட்டி அருகே லாரியை நிறுத்திவிட்டு இருவரையும் கடுமையாக தாக்கி 11லட்சம் பணத்தை கொள்ளை அடித்து விட்டு தான் வந்த காரில் ஆறு பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து தகவல் அறிந்து தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
தாடிக்கொம்பு சார்பு பிரபாகரன் தலைமையிலான போலீசார் பாலகிருஷ்ணன் சதீஷ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்
டிரைவரை கட்டிப்போட்டு பட்டப் பகலில் 11 லட்சம் கொள்ளை போன சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.