திருப்பூர் மண்ணரையைச் சேர்ந்தவர் குப்புசாமி. பனியன் நிறுவனத்தில் டெய்லராக உள்ளார் . இவர் சேலத்தில் இருந்து பஸ்சில் ஏறி மண்ணரைக்கு வந்தார் .
அப்போது அவரது கைப்பையில் ரூ .65 ஆயிரம் வைத்திருந்தார் . மண்ணரை பஸ் நிறுத்தத்தில் அவர் இறங்கி பார்த்த போது பையில் இருந்த பணத்தை காணவில்லை.
உடனடியாக திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். திருப்பூர் போலீசார் விரைந்து வந்து விசாரணையை துவக்கினர். பஸ்சில் குப்புசாமிக்கு அருகே பக்கத்தில் இருக்கையில் இரு பெண்கள் பயணம் செய்தனர் .
இதனால் அவர்கள் திருடி இருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை தொடங்கினார்கள். இதில் அந்தப் பேருந்தில் பயணம் செய்த திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த வாணி, வைதேகி மற்றும் சாய் ஆகியோர் கவனத்தை திசை திருப்பி பையில் இருந்த ரூ .65 ஆயிரத்தை திருடியது தெரியவந்தது .
அவர்களிடமிருந்து ரூ.65 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர் . பின்னர் 3 பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் .
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.