திருக்கோவிலூர் அருகே உண்டியல் இல்லை என்பதற்காக சாமி சிலைகளை உடைத்துச் சென்ற திருடர்கள்??; போலீசார் விசாரணை…!!
Author: Sudha18 August 2024, 4:06 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். மேலும், கோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இரண்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது வடமருதூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான மேட்டு காலனியில், விவசாய நிலத்தில் அய்யனார் மற்றும் அம்மன் சிலைகள் வைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டு சிலைகளையும் நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ சேதப்படுத்தி உள்ளனர். Lகோவில் அமைந்துள்ள பகுதியில் திருடுவதற்கு வந்த திருடர்கள் கோவிலில் உண்டியல் இல்லை என்பதாலும், திருடி செல்ல ஏதுவான பொருட்கள் ஏதும் இல்லாததாலும் ஆத்திரத்தில் சாமி சிலையை சேதப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் திருக்கோவிலூர் போலீஸாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வீடுகளிலும், கோவில்களிலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது இருப்பிடத்தக்கது.