பிரபல தொழிலதிபர் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து துணிகர கொள்ளை : ஸ்கெட்ச் போட்ட போலீசாருக்கு ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
27 August 2024, 8:14 pm

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த வீயன்னூர் பேயோட்டுவிளை பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் மோகனதாஸ்(58) இவர் வீட்டையொட்டி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.

மேலும் பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் மற்றும் பெட்ரொல் பங்குகள் நடத்தி வருகிறார். கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி இவரது வீட்டில் நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்தனர்.

இது தொடர்பாக அவரது மகள் ஆர்த்தி திருவட்டார் போலீசில் புகார் அளித்தார்.
கடந்த புதன்கிழமையன்று இரவு தந்தை மோகனதாஸ் 10 மணிக்கு தூங்கியுள்ளார், ஆர்த்தி இரவு 11 மணிக்கு தூங்கியுள்ளார். 18., தேதி அதிகாலை 1 மணிக்கு காலில் யாரோ மிதித்ததால் “அப்பா அப்பா”என சத்தம் போட்டார்.

அப்போது ஒருவன் அவரது வாயை பொத்தியுள்ளான். கழுத்தின் கத்தியைக்காட்டி மிரட்டினான். . இரும்புக்கம்பியால் மோகனதாஸை மாறி மாறி அடித்துள்ளான். அப்பாவை அடிக்காதீங்க என ஆர்த்தி சத்தம் போட்டார்.

உடனே ஒருவன் ஆர்த்தியின் கன்னத்தில் அடித்தான். உடனே மோகனதாஸ் அப்பாவை அடிக்காதீங்க என சத்தம் போட்டதும் இருவரும் “எங்களுக்கு பணம் தான் தேவை. தந்ததும் போய்விடுவோம்” என்றனர். இருவரது கழுத்தில் கிடந்த நகைகளை பறித்தனர்.

அறைக்கு அழைத்துச்சென்று பீரோவில் இருந்த நகைகள் என மொத்தமாக 78.750 கிராம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டனர். இவற்றின் மதிப்பு ரூ.23,62,500 ஆகும் என குறிப்பிட்டிருந்தார்.

திருவட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 5தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்த நிலையில் நேற்று களியக்காவிளையில் வைத்து போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது, தஞ்சாவூரை சேர்ந்தவர் கிரி(48). இவர் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வேலை வாய்ப்பு நிறுவனம் ஆரம்பிப்பது, பலரிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வசூலிப்பது பின்னர் அங்கிருந்து எஸ்கேப் ஆவது என்ற நிலையிலிருந்தவர் சில மாதங்களுக்குமுன்பு சாமியார்மடத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஆரம்பித்தார்.

கிரி மோகன் தாசின் வீயன்னூர் பேயோட்டுவிளை வீட்டின் அருகில் வசித்துள்ளார். அவர் மோகன் தாஸ் பெட்ரோல் பங்க், நிதி நிறுவனம் நடத்துவதை அறிந்து கொண்டார். மேலும் மோகன் தாசின் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லை, நாய் இல்லை,மேலும் அவரது வீடு ஒதுங்கிய இடத்தில் என்பதை புரிந்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் கோதாவரி கொட்டிக்குடி கிராமம் கோட்டமங்கலத்தை சேர்ந்தவர் மானுகொண்ட அனில்குமார்(34) .இவர் மீது ஆந்திராவில் 15 வழக்குகள், தெலுங்கானாவில் 3 திருட்டு வழக்குகள், தமிழ்நாட்டில் நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூரில் திருட்டு வழக்குகள் உள்ளது.

பத்தாம் வகுப்புவரை படித்த இவரது அண்ணன் பேராசிரியராக வேலை பார்க்கிறார். இவர் இறைச்சிகடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அங்கு ஒரு பெண்ணைகாதலித்ததால் அவரதுதந்தை , அனில்குமாரின் தந்தையை அடித்துள்ளார். தொடந்து அனில்குமார் காதலியின் தந்தை மற்றும் அண்ணனை அடித்துள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது.

சிவகாசியை சேர்ந்தவர் பார்த்திபன்(23). இவர் மீது திருட்டு வழக்குகள் உள்ளது.
வழக்குகள் தொடர்பாக கைதாகி மூன்று பேரும் கோவை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது அனில்குமாரிடமும், பார்த்திபனிடமும் , மோகன தாசின் வீட்டில் லட்சக்கணக்கான பணம் இருக்கிறது.

அதை கொள்ளையடிக்கலாம் என திட்டம் போடுகின்றனர். அனில்குமாரும், பார்த்திபனும் ஜாமீனில் வெளியே வருகின்றனர். கிரி கூறியதன்படி அவர்கள் கடந்த 16.ம் தேதியன்று அவர்கள் பாலகாட்டில் இருந்து ரெயில் மூலமாக திருவனந்தபுரம் வருகின்றனர். பின்ன திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு ஸ்கூட்டி சாவியுடன் இருப்பதைப்பார்த்து அதை திருடிக்கொண்டு இருவரும் மார்த்தாண்டம் வருகின்றனர்.

பின்னர் சாமியார்மடம் -வேர்க்கிளம்பி சாலை வழியாக சென்று மோகன் தாசின் வீட்டை அடையாளம் கண்டு கொள்கின்றனர். அப்போது மோகனதாஸ் காரை கழுவிக்கொண்டிருந்தார். பின்னர் அன்றிரவு கன்னியகுமரி, பேச்சிப்பாறை ஆகிய ஊர்களுக்கு ஸ்கூட்டரில் சுற்றிவிட்டு இரும்பு முதலான ஆயுதங்களுடன் இருவரும் ஸ்கூட்டரிலேயே வீயன்னூர் பேயோட்டு விளைக்கு வந்தனர்.

முன்பக்க கேட் வழியாக இருவரும் உள்ளே குதித்து மாடியில் உள்ள அறைக்குச்சென்று கதவை திறந்துள்ளார். அப்போது இருவரும் முகமூடி அணிந்துள்ளனர். மோகன் தாஸ் திடீரென இரண்டு பேர் முகமூடி அணிந்து எதிரில் நிற்பதைப்பார்த்து அதிர்ச்சியாகவும் ஒருவர் கம்பியால் அவரது தலையில் அடித்தான்.

அவர் குனிந்து கொண்டதால் கன்னத்தில்கம்பி பட்டு கண் வீங்கியது. சத்தம் கேட்டு அவரது மகள் அலறி எழும்பி அப்பாவை அடிக்காதீங்க என சத்தமிட்டார். உடனே அவர் எங்களுக்கு தேவை பணம், நகை தான் வேறொன்றும் செய்ய மாட்டோம் என்றனர்.

உடனே மோகனதாஸ் என்னிடம் பணம் இல்லை என்று கூறுவும் அவர்கள் மீண்டும் மோகனதாசை தாக்கினர். உடனே மகள் பணம் இருக்கும் இடம் கூறுகிறேன் என்று கூறி அவர் மேஜையைத் திறந்து கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்துக்கொடுத்துள்ளார்.

மேலும் 47 பவுன் நகையையும் எடுத்துக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் ஏறி கேரளாவுக்கு சென்றனர். திருவல்லாவில் ஒரு இடத்தில் ஸ்கூட்டரை வைத்து விட்டு திருப்பூருக்கு சென்றனர்.

அங்கு மசாஜ் செண்டர் என்ற போர்வையில் பல்வேறுதொழில்கள் செய்து வரும் சுப்பிரமணியை இருவரும் சந்திக்கின்றனர். அவரிடம் நகையை விற்பதற்கு உதவுமாறு கேட்டனர். அவ்ர் திருப்பூரில் உள்ள பல கடைகளில் விற்க முயற்சித்தபோது விலைகுறைவாக கேட்டதால் என்ன செய்வது என்று யோசித்து, நகையில் பாதியை உருக்கியுள்ளனர். செயின் மோதிரங்களை அப்படியே வைத்துள்ளனர். இதற்கிடையில் அனில் குமார் பெங்களூருவிலுள்ள காதலியிடம் உல்லாசமாக இருப்பதற்கு கொள்ளையடித்தபணத்தில் பாதியை எடுத்துச்சென்றுள்ளார்.

பின்னர் மூவரும் பாலக்காடு வழியாக நேற்று களியக்காவிளைக்கு பஸ்சில் வந்து இறங்கியுள்ளனர். அப்போது தக்கலை இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், திருவட்டார் எஸ்.ஐ. ரமேஷ் மற்றும் போலீஸ் படையினர் சந்தேகத்துக்கிடமாக நின்றுகொண்டிருந்த அனில்குமாரையும் பார்த்திபனையும் சுப்பிரமணியையும் விசாரித்துக்கொண்டிருக்கும்போதுமூவரும் மேக்கோடு செல்லும் ரோட்டில் ஓடினர். போலீசார் அவர்களை விரட்டினர்.

பார்த்திபனும் சுப்பிரமணியும் போலீஸ் பிடியில் சிக்கிக்கொண்டனர். பனங்காலை ரெயில்வே பாலத்திலிருந்து கீழே குதித்த அனில்குமார் கீழே விழுந்து வலது கால் முறிந்தது.

மூன்றுபேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அனில்குமார் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். 47 பவுன் நகை மற்றும் திருவல்லாவில் மறைத்து வைத்திருந்த ஸ்கூட்டர் மீட்கப்பட்டது.

அனில்குமார்(34), சிவகாசி பார்த்திபன்(23), திருப்பூரைச்சேர்ந்த சுப்பிரமணி(37) ஆகியோரை கைது செய்து 47 பவுன் நகையை திருவட்டார் போலீசார் மீட்டனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 824

    0

    0