மீண்டும் ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் மட்டும் கிடைப்பது ஏன்?

Author: Hariharasudhan
23 November 2024, 9:52 am

திருச்சி காவிரி கரையோரத்தில் ஒரே மாத காலத்தில் இரண்டாவது முறையாக ராக்கெட் லாஞ்சர் கிடைத்து உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருச்சி: திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரை ஓரத்தில் ராக்கெட் லாஞ்சர் போன்ற வடிவத்தில் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனைப் பார்த்த மக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.

இதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராக்கெட் லாஞ்சரை அறிவியல் நிபுணர்கள் உடன் இணைந்து மண்ணுக்குள் பாதுகாப்பாக புதைத்து வைத்தனர். இதனையடுத்து, வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் உடன் இணைந்து இதனை வெடிக்கச் செய்யப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக, கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இதே திருச்சி மாவட்டத்தின், அந்தநல்லூர் வடக்கு பகுதியில் உள்ள கரூர் சாலையில் இருக்கும் தீர்த்தநாதர் சுவாமி கோயிலுக்கு எதிரே உள்ள காவிரி ஆற்றின் படித்துறையில் சிறிய அளவிலான ராக்கெட் லாஞ்சர் கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், இது குறித்து ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Rocket Launcher found in Trichy on November

இதையடுத்து, காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார், ராக்கெட் லாஞ்சரைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த ராக்கெட் லாஞ்சர், கொரியப் போரில் 1960ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அமெரிக்காவால் கொரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது எனவும், இந்த லாஞ்சர் எப்படி இங்கு வந்தது என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்றும் திருச்சி எஸ்பி வருண்குமார் தெரிவித்தார்.

அது மட்டுமல்லாமல், இம்மாத தொடக்கத்தில், சென்னை காசிமேடு மீனவர்கள், கடலில் மீன்களுக்காக வலைவீசிய போது சுமார் 500 கிலோ எடை உள்ள ராக்கெட் லாஞ்சர் பாகம் வலையில் சிக்கி உள்ளது. பின்னர், இதனை மீன்பிடி துறைமுக காவல்துறை மற்றும் காசிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்து உள்ளனர்.

இதையும் படிங்க: சொந்த தம்பியைக் கொன்ற நபருடன் அக்கா கள்ள உறவு.. நடுரோட்டில் தீர்க்கப்பட்ட முன்பகை!

அதற்கும் முன்னதாக, கடந்த 2021, மே மாதம் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள், வேதாரண்யத்திற்கு கிழக்கே சுமார் 8 நாட்டிக்கல் மைல் தூரத்தில் கடலில் வலை விரித்த போது, வலையில் ஒரு பெரிய இரும்புப் பொருள் சிக்கியது. பின்னர், இதுகுறித்து மீனவர்கள் வேளாங்கண்ணி கடலோரக் காவல் படைக்குத் தகவல் தெரிவித்தனர் என்பதும், அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

  • Khushbu at Goa Film Festivalபடப்பிடிப்பில் அத்துமீறிய ஹீரோ..செருப்பை காட்டிய குஷ்பூ.!
  • Views: - 46

    0

    0

    Leave a Reply