நீதிமன்றம் வந்த ராக்கெட் ராஜா.. பறிபோன உதவி காவல் ஆய்வாளர் பதவி : அடுத்த நிமிடமே வந்த ஆர்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2024, 8:14 pm

நெல்லை நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்த பனங்காட்டு படை கட்சி தலைவர் ராக்கெட் ராஜாவின் பாதுகாப்புக்கு வந்த காவல் வாகனத்திலிருந்து இறங்கி ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறிய திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

பனங்காட்டு படை கட்சியின் நிறுவன தலைவரான ராக்கெட் ராஜா இரண்டு கொலை வழக்கு மற்றும் பேருந்து எரித்த வழக்கு சம்பந்தமாக நெல்லை நீதிமன்றத்திற்கு கடந்த 19ஆம் தேதி ஆஜராக வந்திருந்தார் .

இதற்காக அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள ஆணைகுடி பகுதியில் இருந்து நீதிமன்றத்திற்கு வரும்பொழுது திசையன்விளை காவல்துறையினர் அவருக்கு நெல்லை காவல் மாவட்ட எல்கை வரையில் பாதுகாப்பு அளித்தனர் .

அந்த வாகனத்தில் திசையன்விளை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி நெல்லை நீதிமன்ற அலுவல் வேலைக்காக அதே பாதுகாப்பு வாகனத்தில் ஏறி வந்துள்ளார்..

மாநகர எல்லைக்குள் வந்தவுடன் திசையன்விளை காவல்துறையினர் தங்களது பாதுகாப்பை நெல்லை மாநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து மாநகர காவல் துறையினர் ராக்கெட் ராஜாவுக்கு பாதுகாப்பு அளித்து நெல்லை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் நீதிமன்ற அலுவலக பணிக்காக திசையன்விளையை காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாநகர பாதுகாப்பு காவல் வாகனத்தில் ஏறாமல் ராக்கெட் ராஜா வாகனத்தில் ஏறி நீதிமன்றம் சென்றுள்ளார் .

இதனை அடுத்து வந்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் கடந்த 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ராமமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

  • siruthai siva direct new film after kanguva flop தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?