மைக் ஆன்…வசமாக சிக்கிய ரோஹித் சர்மா…அப்படி என்ன சொன்னார் மேடையில்..!

Author: Selvan
18 January 2025, 9:00 pm

செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் சர்மாவின் வைரல் பேச்சு..

சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை தேர்வுக்குழு இன்று அறிவித்தது.அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும்,தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.

இதையும் படியுங்க: ரோஹித் தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபி-க்கு ரெடியான இந்திய அணி…மீண்டும் அணிக்கு திரும்பிய முக்கிய வீரர்..!

நேற்று பிசிசிஐ இந்திய அணிக்கு பல புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.இனி இந்திய அணி தங்களுடைய குடும்பங்கள் மற்றும் மனைவிகளை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போது அழைத்து செல்ல அனுமதி மறுத்தது.

Rohit Sharma controversy new BCCI rules

அப்போது அஜித் அகர்கரிடம் ரோஹித் சர்மா மைக் ஆன்ல இருப்பதை கவனிக்காமல் புதிய விதிமுறைகளை பற்றி தேர்வுக்குழு கூட்டத்தில் பேசுமாறு வீரர்கள் எனக்கு தொலைபேசியில் அழைத்துகொண்டே இருக்கின்றனர்,பத்திரிகையாளர் சந்திப்பு முடித்த பின்பு இதைப்பற்றி நாம் பேச வேண்டும் என அஜித் அகரகரிடம் ரகசியமாக கூறினார்,ஆனால் மைக் ஆன்ல இருந்ததால் அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது.

ரோஹித் ஷர்மாவின் இந்த செயலால் புதிய விதிமுறைகளில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என வீரர்கள் நினைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலும் அஜித் அகர்கர் அணைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவேண்டும் என சொல்லிக்கொண்டு இருக்கு போது,ரோஹித் குறுக்கிட்டு பல வீரர்கள் தொடர்ந்து சர்வேதேச போட்டிகளில் விளையாடி கொண்டிருப்பதால்,அவர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையட நேரம் கிடைப்பதில்லை எனவும் தெரிவித்தார்.

  • நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!