ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

Author: Hariharasudhan
9 March 2025, 6:01 pm

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி இன்று பிற்பகல் 2.30 துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. முன்னதாக, இந்த இறுதிப் போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

எனவே, இந்த டாஸ் தோல்வியையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 15 ஒரு நாள் போட்டிகளில், இந்தியா 15 முறை டாஸ் வீசுவதில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்வியைச் சந்தித்த அணி என்ற மோசமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. மேலும், இதையும் சேர்த்து ரோகித் சர்மா தனது கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வெற்றி பெறவில்லை.

இதன் வாயிலாக, ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். முன்னதாக, 1998 – 1999 காலக்கட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா 12 போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வெல்லவில்லை. தற்போது அந்த 26 வருட மோசமான உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.

Rohit Sharma toss record

ஆனால், இந்த மோசமான டாஸ் தோல்விகளைப் பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ஏனெனில், ஏற்கனவே டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமலேயே தொடர்ந்து வெற்றி பெற்றதைப் போலவே, இப்போட்டியிலும் வெல்ல முடியும் என்றும் ஹிட்மேன் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, இந்திய அணி தனது அபார ஆட்டத்தைக் காண்பித்து வருகிறது.

இதையும் படிங்க: மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இதன்படி, நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. குறிப்பாக, பல இடர்கள் மற்றும் பேச்சுகளுக்கு மத்தியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் கேன் வில்லியம்சன் என்ற முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணிக்கு வலு சேர்த்துள்ளார். எனவே, இந்தியா தனது வெற்றியைப் பதிவு செய்து கோப்பையை வெல்லும் நோக்கில் 252 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!