பிட் வேணுமா..இது என்ன அழகி போட்டியா..காங்கிரஸ் தலைவரை வெளுத்துவிட்ட கவாஸ்கர்.!
Author: Selvan5 March 2025, 1:56 pm
கிரிக்கெட்டிற்கு திறமை மட்டுமே போதும்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்து காங்கிரஸ் தலைவர் ஷாமா முகமது வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க: அதல பாதாளத்திற்கு சென்ற லைக்கா…காலை வாரிய விடாமுயற்சி.!
அவர் ரோஹித் சர்மா உடல் எடை அதிகம்,ஒரு விளையாட்டு வீரருக்கு ஏற்ற தோற்றம் இல்லாதவர்,எடை குறைக்க வேண்டும் என தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக பதிலளித்துள்ளார், அதாவது “உடல் எடையை விட திறமை தான் முக்கியம்,இது மாடலிங் போட்டி அல்ல,கிரிக்கெட்…வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதே முக்கியம்” என்று கூறினார்.மேலும், சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் உடல் அமைப்புக்காக விமர்சிக்கப்படுவது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
“ஒரு வீரர் அணிக்காக ரன்கள் எடுக்கிறார் என்றால்,அவரது தோற்றம் எந்த விதத்திலும் தொடர்பில்லை” என்று கவாஸ்கர் வலியுறுத்தினார்.சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் அதிகரித்ததால்,ஷாமா முகமது தன்னுடைய பதிவை நீக்கினார்.
உலகக் கோப்பை மற்றும் பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வி கண்டதைத் தொடர்ந்து, ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.இருப்பினும் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியை அற்புதமாக வழிநடத்தி,இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது,அனைத்துவித சர்வேதச போட்டிகளிலும் இந்திய அணியை இறுதி போட்டிக்கு அழைத்து சென்ற பெருமையை பெற்றுள்ளார் ரோஹித் சர்மா.