ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம்: சீரமைக்கும் பணிகள் தீவிரம்!!

Author: Rajesh
6 March 2022, 3:46 pm

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மேற்கூரையை இடித்து சீரமைக்கும் பணிகள் துவக்கி உள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டிடத்தில் உள்ள மூன்று தளங்களில், சமூகநலத்துறை, உணவு பாதுகாப்புதுறை, குழந்தைகள் நலத்துறை, இ சேவை மையம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த கட்டிடத்தில் அண்மையில் பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கட்டிடத்தின் முகப்பில் உள்ள மேற்கூரை பழுதடைந்து மோசமாக இருந்தது. அரசு அதிகாரிகள், ஊழியர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகம் வரும் இடம் என்பதால் மேற்கூரையை சீரமைக்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டபட்டது.

இந்த நிலையில் அங்கு ஊழிர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட போது, மேற்கூரை மிகவும் வழுவிழந்த நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. மேற்கூரையின் ஒரு பகுதியில் இடித்த போது, திடீரென மேற்கூரையில் ஆங்காங்கே சிமெண்டு காரைகள் இடிந்து கீழே விழுந்தது. இதையடுத்து பணியில் இருத்த ஊழியர்கள் விலகி நின்றவாறு சிமெண்டு காரைகளை அகற்றினார்.

அதே போல் மேற்கூரைக்கு தூண்கள் இல்லாமல் இருக்கும் நிலையில், கம்பிகளும் மோசமாகவே காட்சியளிக்கிறது. இதனால் உரிய பாதுகாப்புடன் மேற்கூரையை அகற்றி, விரைந்து சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 1036

    0

    0