ராமநாதபுரம் : பரமக்குடி நகராட்சி பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையா புரத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்கள் பெண்கள் என மொத்தம் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு பள்ளியிலே வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளையில், உணவு சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மதிய உணவில் வழங்கப்பட்ட முட்டை கெட்டுப் போயிருந்ததால் மாணவ, மாணவிகளுக்கு இவ்வாறு ஏற்பட்டு உள்ளது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரம் இல்லாமல் வழங்கியதால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
This website uses cookies.