பிரபல ரவுடி மண்ட வெட்டி மாதவனின் மண்டையை வெட்டி கொலை செய்த கொடூரம் : திருச்சியில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 12:18 pm

பிரபல ரவுடி மண்ட வெட்டி மாதவனின் மண்டையை வெட்டி கொலை செய்த கொடூரம் : திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வசித்தவர் மண்டை வெட்டி மாதவன் என்கிற மாதவன்(40). கஞ்சா வியாபாரியான மண்டை வெட்டி மாதவன் மண்ணச்சநல்லூர் பகுதியில் தாய் ஆண்டாள், மனைவி சித்ராவுடன் வசித்து வந்தார்.

இவன் மீது கஞ்சா வியாபாரம், கொலை உள்ளிட்ட பல்வேறு 11 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் உள்ளன. இந்த நிலையில் மாதவன் நேற்று இரவு சங்கர், மணிகண்டன் ஆகியோருடன் திருவானைக்காவல் பகுதிக்கு சென்றுள்ளார்.

இன்று காலை திருவானைக்கோவில் சன்னதி வீதி நான்கு கால் மண்டபம் அருகே செல்வம் என்பவர் அப்பகுதியில் உள்ள வயல்களுக்கு காவலாளியாக இருந்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல் ஆறு மணி அளவில் பூட்டி விட்டு சென்ற அவர் இன்று காலை 7 மணி அளவில் வழக்கம் போல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மண்டபத்தின் அருகே ஒருவர் கொடூரமாக மண்டை கழுத்து பகுதியில் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனையடுத்து காவல்துறை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை செய்ததில் கொலை செய்யப்பட்டவர் மண்டை வெட்டி மாதவன் என்பது தெரிய வந்தது.

மண்டை வெட்டி மாதவனை மண்டை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். அவர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை நள்ளிரவில் நடந்திருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரை கொலை செய்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகரின் முக்கிய பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 770

    0

    0