தமிழகம்

ஈரோடு ஹைவேயில் ரவுடி சரமாரி வெட்டிக்கொலை.. 3 பேர் சுட்டுப்பிடிப்பு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஈரோடு நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர்.

ஈரோடு: சேலம் மாவட்டம், கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான் என்கிற சாணக்யா (35). இவருக்கு சரண்யா என்ற மனைவி மற்றும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மேலும், ஜான் மீது கிச்சிபாளையம், அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், ஜான் தனது குடும்பத்தினருடன் திருப்பூர், பெரியபாளையத்தில் வசித்து வந்தார். இதுதவிர, நிதி நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று (மார்ச் 19) வழக்கு ஒன்றுக்காக அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக ஜான் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சரண்யாவும் வந்துள்ளார்.

இதனையடுத்து, காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு இருவரும் காரில் திருப்பூர் சென்றுள்ளனர். ஈரோடு, நசியனூர் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் வந்த மற்றொரு கார் ஜான் கார் மீது மோதி நின்றுள்ளது. பின்னர், காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் ஜானை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி தலைமறைவாகி உள்ளனர்.

அப்போது, இதனைத் தடுக்க முயன்ற ஜான் மனைவி சரண்யாவுக்கும் வெட்டுக்காயம் விழுந்துள்ளது. இதனையடுத்து, அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

இந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்படி, பவானி அருகே மர்ம கும்பல் தப்பி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, அங்கு டிஎஸ்பி ரத்தினகுமார் தலைமையிலான போலீசார், மர்ம கும்பலை கால்களில் சுட்டுப் பிடித்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகிய மூவரையும் போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். இவர்கள் உட்பட மொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

துபாயில் ரகசிய நகைக்கடை…பலே நெட்ஒர்க்கில் நடிகை ரன்யா ராவ்.!

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையும்…

37 minutes ago

என் ஆடையை கழட்ட சொன்னாங்க..பிரபல தொகுப்பாளர் DD சொன்ன அதிர்ச்சி தகவல்.!

நிகழ்ச்சியில் நேர்ந்த மோசமான அனுபவம் விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி,காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பெரும் புகழைப்…

2 hours ago

அந்த பாட்டு இருக்கும் போது எப்படிங்க..CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத்.!

விசில் போடு – CSK-வின் அடையாளம் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் அனிருத்,தொடர்ந்து பல ஹிட் பாடல்களை…

2 hours ago

அண்ணாமலைக்கும், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கும் என்ன வித்தியாசம்? கொந்தளித்த தவெக!

அண்ணாமலை தொடர்ச்சியாக அனைவரையும் தரம் தாழ்ந்து விமர்சித்து வருகிறார் என தவெக ராஜ்மோகன் விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக தமிழக…

3 hours ago

அஜித்துடன் இணையும் ‘டாக்டர்’ பட பிரபலம்…முக்கிய ரோலில் மிரட்டல்.!

அஜித்துடன் பணிபுரிந்த அனுபவம் - ரகுராம் பகிர்வு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்,அஜித் நடித்துள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் இறுதிக்கட்டத்தை…

3 hours ago

சமச்சிட்டேன் சாப்ட்ருங்க.. கணவருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி விபரீத முடிவு.. கொடுமையின் உச்சம்!

வரதட்சணை மற்றும் மன ரீதியான உளைச்சல் கொடுத்ததால் கடிதம் மற்றும் மெசேஜ் அனுப்பிவிட்டு மனைவி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார்…

4 hours ago

This website uses cookies.