என்கவுன்டர் பீதி : பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் திடீர் சரண் : வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவு….

Author: kavin kumar
25 January 2022, 3:24 pm

காஞ்சிபுரம் : பிரபல ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், அவரை வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என பல வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன. படப்பை குணா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்த நிலையில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கண்காணிப்பாளர் வெள்ளதுரை தலைமையில் போலீசார் படப்பை குணாவை தேடி வந்தனர்.

இதனிடையே படப்பை குணாவின் மனைவி நீதிமன்றத்தில் தன் கணவரை போலீசார் என்கவுன்டர் செய்ய முயற்சிப்பதாக மனு ஒன்றை அளித்தார். ஆனால் இதனை மறுத்த காவல்துறை குணாவை என்கவுன்டர் செய்யும் திட்டம் இல்லை என்றும், அவர் சரணடைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணா இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதனைத் தொடர்ந்து சரணடைந்த ரவுடி படப்பை குணாவை வரும் 31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க 17வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் இருந்து பூந்தமல்லி கிளை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். அடுத்தப்படியாக நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி படப்பை குணாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கான நடவடிக்மைகளை காவல்துறை விரைவில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 4845

    0

    0