கோவை : தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரை பிடிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாநகரின் 11 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்ததோடு, 200க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக அல் உம்மா அமைப்பின் தலைவர் பாஷா, முகமது அன்சாரி உட்பட 168 பேர் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், 14 பேருக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய முஜிபுர் ரகுமான் என்கிற முஜி மற்றும் சாதிக் (எ) ராஜா (எ) டெய்லர் ராஜா (எ) வளர்ந்த ராஜா ஆகிய இருவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர்.
இவர்கள் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், தற்போது அவர்களை பிடிக்க சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு, கோவை, திருச்சி, மதுரை என மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு சிறப்பு படை என 3 தனிப்படைகளை அமைத்துள்ளது.
ஏற்கனவே கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்னாடகாவில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் இம்மாநிலங்களில் துண்டு பிரசுரங்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஓட்டியும் விசாரணை நடத்த தனிப்படைகள் முடிவு செய்துள்ளன. இவர்கள் இருவர் குறித்து தகவல் அளித்தால் தலா 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.