ரூ.3 ஆயிரம் கோடி முறைகேடு எதிரொலி? தமிழகத்தில் ஒரே நாளில் சார் பதிவாளர்கள் கூண்டோடு மாற்றம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2023, 9:35 pm

அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் நேற்று 36 பதிவாளர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இன்று சார் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை மண்டலம் மற்றும் நெல்லை மண்டலங்களின் 36 மாவட்ட பதிவாளர்களைக் கூண்டோடு மாற்றி நேற்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. நிர்வாக காரணங்களுக்காக மாவட்டப் பதிவாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்த நிலையில் இன்று நிர்வாக காரணங்களின் அடிப்படையில் 55 சார் பதிவாளர்கள் மாற்றப்படுவதாக அரசு செயலாளர் ஜோதி நிர்மலசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

செங்குன்றம் மற்றும் திருச்சியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.3 ஆயிரம் கோடி கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!