ரூ.4 கோடி விவகாரம்.. சிபிசிஐடி ரெய்டுக்கு பின் பாஜக பொருளாளர் SR சேகர் ஒரே வார்த்தையில் பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2024, 2:53 pm

ரூ.4 கோடி விவகாரம்.. சிபிசிஐடி ரெய்டுக்கு பின் பாஜக பொருளாளர் SR சேகர் ஒரே வார்த்தையில் பதிலடி!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஜகவின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். தேர்தல் சமயத்தில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சார் சம்மன் அனுப்பி வந்தனர்.

நேற்று சம்மனை பெற்றுக் கொண்ட மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சிபிசிஐடி அலுவலகத்தில் தனக்கு பத்து நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார்.
கடிதம் எழுதியும் கொடுத்திருந்தார்.

ஆனால் இன்று காலை 9 மணி அளவில் சென்னை கோவை சேர்ந்த சிபிசிஐடி அதிகாரிகள் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க: போதையில் அதிவேகமாக காரை ஓட்டி 2 பேரை கொன்ற 17 வயது சிறுவனுக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன்.. விமர்சிக்கப்படும் நீதி!!

அவர்கள் கேட்ட அனைத்து விசாரணைக்கும் தகுந்த பதில் கொடுத்திருப்பதாகவும் 9 மணியிலிருந்து 11 மணி வரை விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து எஸ்.ஆர்.சேகர் பேசும்போது தற்போதுள்ள தமிழக அரசின் பழிவாங்கும் முயற்சியாகவும் பாஜகவிற்கு கலங்கத்தை ஏற்பட்டும் முயற்சியாகவும் காவல்துறையை ஏவி விட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனக்கும் சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட விசாரணைக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக கூறியுள்ளதாக செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி