விஸ்வரூபம் எடுக்கும் ரூ.4 கோடி விவகாரம்… சிக்கும் பாஜக முக்கிய புள்ளி : அதிரடி நோட்டீஸ்!!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2024, 11:17 am

விஸ்வரூபம் எடுக்கும் ரூ.4 கோடி விவகாரம்… சிக்கும் பாஜக முக்கிய புள்ளி : அதிரடி நோட்டீஸ்!!!

கடந்த 6-ந்தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில், ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரிப்பதற்காக அவருக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கோவர்த்தனின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரது மகன் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்த பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 489

    0

    0