தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் : கடலூர் வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக அண்ணாமலை!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2022, 5:14 pm
கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வானவேடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் வெடிவிபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவுட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் பட்டாசு வெடி விபத்து சம்பவம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது.
இறந்தவர் குடும்பத்திற்குத் பாஜக ஆழ்ந்த இரங்கல்கள். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம். இறந்தவர் குடும்பத்திற்கு தலா 50 லட்ச ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 15 லட்ச ரூபாயும் நிவாரணமாக திமுக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்பதே பாஜக-வின் கோரிக்கை. என பதிவிட்டுள்ளார்.