தமிழகத்தில் இதுவரை ரூ.53.72 லட்சம் பறிமுதல்: மாநில தேர்தல் ஆணையம் தகவல்
Author: kavin kumar1 February 2022, 5:32 pm
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ. 53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.
வரும் 19 ஆ,ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் இடங்களில் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ரூ.50 ஆயிரத்திற்க்கு அதிகமான அளவில் பணம் மற்றும் பொருட்கள் ஆவணமின்றி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல இடங்களில் 1,650 பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் தமிழகம் முழுவதும், ரூ.53,72,001 மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 40.40,831 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ. 12. 57 லட்சம் மதிப்புள்ள 15 லேப்டாப்கள், 40 செல் போன்கள், 19 துண்டுகள் , 140 குத்து விளக்குகள் உள்ளிட்ட பொருட்கலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ரூ. 74 ஆயிரத்து 90 மதிப்புள்ள மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.