லாட்டரியால் ரூ.62 லட்சம் இழப்பு…? திமுக கவுன்சிலரின் கணவர்தான் காரணம் என கூறி விசைத்தறி உரிமையாளர் தற்கொலை : பரபரப்பு வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan14 May 2022, 1:20 pm
ஈரோடு : லாட்டரியில் பணத்தை இழந்த முதியவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக வீடியோ வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். தறிபட்டறை நடத்தி நஷ்டத்தை அடுத்து நூல் ஏஜெண்டாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கருங்கல்பாளையத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் கீதாஞ்சலியின் கணவர் செந்திலிடம் லாட்டரியில் 62 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளதாகவும் எனவே தன் இறப்பிற்கு காரணம் அவர்தான் என்றும், செந்திலிடம் ரூ.30 லட்சத்தை நஷ்டயீடாக பெற்று தனது குடும்பத்தினரிடம் வழங்கவேண்டும் என அவர் கூறினார்.
லாட்டரி சீட்டால் ஈரோடு மாநகரில் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதாகவும், லாட்டரி இல்லா மாவட்டமாக ஈரோட்டை மாற்ற வேண்டும் என வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். தான் பேசிய வீடியோவை பலருக்கும் அனுப்பி வைத்த ராதாகிருஷ்ணன் பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
வீடியோவைப் பார்த்த பலர் உடனடியாக அவரது வீட்டுக்குச் சென்று பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாட்டரி சீட்டில் பல லட்சம் ரூபாயை இழந்து அமைச்சருக்கு கோரிக்கை வைத்தவுடன் தற்கொலை செய்து கொண்டது ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0