குழந்தைக்காக வாங்கிய குளிர்பானத்தில் மிதந்த ரப்பர் வாசர்… அலட்சியமான பதிலால் அதிருப்தி.. உணவுத்துறை அதிகாரியை நாடிய இளைஞர்..!

Author: Babu Lakshmanan
5 April 2024, 6:18 pm

மதுரையில் குழந்தைகள் பருகும் பிரபலமான குளிர்பானத்துக்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக மதுரையில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிர்பானங்களின் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே உள்ள ஒரு கடையில் மதிச்சியம் பகுதியை சேர்ந்த தங்கராஜ்  என்பவர், தனது குழந்தை பருகுவதற்காக பிரபலமான குளிர்பானம் ஒன்றை வாங்கி உள்ளார். 

மேலும் படிக்க: நாடாளுமன்ற தேர்தலில் திமுக ‘டாப்’…. 2026 தேர்தலில் கலக்கப் போகும் விஜய் கட்சி ; வெளியானது கருத்துக்கணிப்பு..!!

அந்த குளிர்பான பாட்டிலினுள் வாசர் ரப்பர் போன்ற பொருள் ஒன்று கிடந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து, குளிர்பான விநியோக மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, முறையாக பதில் ஒன்றும் அளிக்காமல் முரண்பாடாக பேசி உள்ளார். மேலும், ‘லீகலா மூவ் பண்ணி முடிஞ்சத பாத்துக்கோங்க’ என்று சவால் விடுக்கும் வண்ணம் பேசியுள்ளார்.

மேலும் படிக்க: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்

இந்நிலையில், தங்கராஜ் தற்போது தனது நண்பர்கள், வழக்கறிஞர்கள் மூலம் இதனை மதுரை உணவுத்துறை அதிகாரியின் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளார். மேலும், குழந்தைகள் விரும்பி பருகும் பிரபலமான பாரம்பரிய குளிர்பானத்தில் குழந்தைகளின் உயிரை பறிக்கும் வகையில் ரப்பர் பொருள்  கிடப்பதை முறையாக சோதனை செய்யாமல், விற்பனைக்கு கொண்டு வந்த குளிர்பானம் நிறுவனம் மீது வழக்கு தொடர போவதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகள் விரும்பி பருகும் பிரபலமான குளிர்பானத்திற்குள் ரப்பர் பொருள் கிடந்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்