அதிமுக பெயரில் ரப்பர் ஸ்டாம்ப்.. ரசீது பதிவு செய்து கிராவல் மண் கடத்தல் : திமுக ஊராட்சி மன்ற தலைவரின் தில்லு முல்லு!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2024, 12:43 pm
திண்டுக்கல் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தொகுதியான ஆத்தூர் தொகுதியில் உள்ள ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியில் அம்மாபட்டி திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் அதிமுக பெயரை பயன்படுத்தி ரசீது தயார் செய்து கடந்த ஒரு மாதங்களாக மாங்கரை பெரிய குளத்தில் 24 மணி நேரமும் கிராவல் மண் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து ரெட்டியார்சத்திரம் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கிடைத்ததன் பெயரில் அதிமுக பெயரை களங்கப்படுத்தும் விதமாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வரும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 20க்கும் மேற்பட்ட கட்சி பொறுப்பாளர்களுடன் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மீது ரெட்டியார் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் மனு வழங்கினார்
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மாவட்ட கழகத்தின் பரிந்துரையின் பெயரில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றும் கூறினார்