கருணாநிதியின் சிலை தயாரிக்கும் இடத்திற்கு முதலமைச்சர் வருவதாக வதந்தி : திமுக தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 April 2022, 11:07 pm
சென்னையில் தமிழக முன்னாள் முதல்வர் திமுக தலைவர் கலைஞரின் நின்ற நிலையில் உள்ள 16அடி வெண்கல திருவுருவச் சிலையை அவரது பிறந்தநாளில் நிறுவுவதற்கு சிலை அமைக்கும் பணிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட வருவதாக வந்த தகவலில் கட்சியினர் திரண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள புதுப்பேடு எஸ்பி பிள்ளை சிற்பக் கலைக்கூடத்தில் தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் 16 அடி உயரம் உள்ள வெண்கல சிலை சென்னையில் ஓமந்தூரார்
மாளிகை முன்பாக கலைஞரின் பிறந்த நாளன்று நிறுவுவதற்கு சிலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது களிமண் அச்சு மூலம் சிலை மாதிரி அமைக்கப்பட்டு உள்ளது. பின்னர்
படிப்படியாக வென்கலசிலை உருவாக்கப்பட்டு அவரது பிறந்த நாளன்று நிறுவி திறப்பதற்கான ஏற்பாடுகளை சிற்பி தீனதயாளன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றர்.
16 அடி உயர மாதிரி களிமண் கலைஞர் முழு திருவுருவச் சிலையை இறுதி வடிவமைப்பை நேரில் பார்வையிட உள்ளதாகவும் அதற்கான பணிகளை சிலை வடிவமைப்பு குழுவினர் செய்து வருவதை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் இன்று பார்வையிட உள்ளதாக கட்சியினருக்கு தகவல் பரவியதால் அங்கு தொண்டர்கள் திரண்டனர்.
இந்த சிலையானது தமிழகத்திலேயே ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அரசியல் பிரமுகர்களின் வெண்கல சிலைகளை விட மிக உயரமான வெண்கல சிலை என்பதும் சென்னையில் இச்சிலை நிறுவப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.