ஓடிப்போன ஒப்பந்ததாரர்… இனி என்ன செய்ய முடியும் : செய்தியாளர்கள் சந்திப்பில் கையை விரித்த அமைச்சர் கே.என்.நேரு!!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2023, 4:08 pm
வேலூர் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்றது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே .என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநகராட்சியில் என்னென்ன பணிகள் நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்தோம்.
பாதாள சாக்கடை திட்டங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அதனை முடிக்க ஆணை வழங்கி நிதியும் தருவதாக கூறியுள்ளோம். மே 15ஆம் தேதிக்குள் நீர் வழங்குவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சாலைகளுக்கும் நிதி ஒதுக்க அறிவுறுத்தியுள்ளோம். மின் விளக்குகளுக்கும் நிதி ஒதுக்கபடவுள்ளது. மாநகராட்சிக்கு சாலைகளுக்காக 250 கோடி அளிக்கிறோம். 15 ஆவது நிதி குழுவில் 70 கோடி அளிக்கிறோம் மூலதன மானிய திட்டத்தில் 25 கோடி மொத்தம் 314 கோடி தருகிறோம். வரி வசூல் முறையாக செய்ய சொல்லியுள்ளோம்.
குப்பைகள் கொட்டவும் ஆட்சியர் இடம் ஒதுக்கி தருவதாக கூறியுள்ளார் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 91 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது வேலூருக்கு 963 கோடியில் 114 பணிகளில் 91 பணிகள் முடிவடைந்துள்ளது விரைவில் பணிகள் முடிவடையும் ஜுன் மாதத்திற்குள் பணிகள் முடியும். பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் 29 கிலோ மீட்டர் தூர அளவுக்கு போட வேண்டியுள்ளது.
அதனையும் செய்து முடிப்பார்கள்.ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் காவிரி கூட்டு குடிநீருகாக 14 ஆயிரம் கோடி லோன் கேட்டு காத்திருக்கிறோம் குப்பைகள் தரம் பிரிப்பது குறித்தும் கேட்டுள்ளோம். தனியாருக்கு ஏலமும் விடப்பட்டுள்ளது.
குப்பைகளில் எலக்ட்ரானிக் கழிவுகள் மற்றும் மனித கழிவுகள் குவித்து அழிப்பது குறித்தும் திட்டங்கள் போட்டு செயல்படுத்தவுள்ளோம். அம்ரூத் திட்டத்தில் 11 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் ஆங்காங்கே பைப்புகள் உடைந்து குழாய்கள் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகளுக்கு தண்ணீர் வழங்கபடவில்லை மேலும் ஒப்பந்ததாரரும் ஓடிவிட்டார். அவரை நான் என்ன செய்ய முடியும் மக்கள் குப்பைகள் கொளுத்துவதை தடுக்க ஆங்காங்கே குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்