சூதாட்ட விடுதி நடத்தி லட்சம் லட்சமாக வருமானம்.. கசிந்த ரகசியம் : திமுக கவுன்சிலர், மனைவி உட்பட 3 பேர் கைது!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 8:19 pm

சூதாட்ட விடுதி நடத்தி லட்சம் லட்சமாக வருமானம்.. கசிந்த ரகசியம் : திமுக கவுன்சிலர், மனைவி உட்பட 3 பேர் கைது!

கோவை மாநகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சரண்யா இவரது கணவர் செந்தில்குமார் அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர் கணபதி ராஜவீதி,பஜனை கோவில் தெருவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

ரகசிய தகவலின் பேரில் சரவணம்பட்டி போலீசார் திடீர் சோதனையை மேற்கொண்டனர்.அப்போது அங்கு 25 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து அங்கிருந்து சுமார் 12லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 25 நபர்களை போலீசார் கைது செய்தனர்.20 பேர் காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சூதாட்டத்திற்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட நிலையில் மாநகராட்சி கவுன்சிலரின் கணவரே சூதாட்ட விடுதியை நடத்தியதும் அங்கு போலீசார் லட்சக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!