ஓடும் ரயிலில் பட்டா கத்தியை வைத்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்… நடைமேடையில் உரசியபடி செல்லும் அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
22 September 2022, 2:28 pm

ரயிலில் கல்லூரி மாணவர்கள் பட்டா கத்தியை வைத்து அட்டகாசம் செய்யும் வீடியோக காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை வேளச்சேரியில் இருந்து அரக்கோணம் நோக்கி செல்லும் ரயிலில் கல்லூரி மாணவர்கள் சிலர் பெரம்பூர் ரயில் நிலையத்தில் கூட்டமாக ஏறியுள்ளனர். இவர்கள் பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த கல்லூரி மாணவர்கள் ரயிலில் படிக்கட்டில் தொங்கியப்படியே பயணம் செய்த நிலையில், பட்டா கத்தியை அவர்கள் நடைமேடையில் உரசியப் படியேவும், ரயில் பெட்டியில் பட்டாகத்தியால் தட்டியபடியே கூச்சலிட்டுள்ளனர். அதைப் பார்த்த ரயில் பயணிகள் அச்சத்தோடு பயணம் செய்துள்ளனர்.

இந்தக் காட்சிகளை அங்கிருந்து சென்ற சிலர் தங்களின் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரயில்வே போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அட்டகாசத்தில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும், அவர்களை அடையாளம் காணும் பணியில் ரயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

  • ajith kumar banner fell down in tirunelveli pss multiplex திடீரென சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்! தெறித்து ஓடிய ரசிகர்கள்… வைரல் வீடியோ