பாக்ஸ் ஆபிஸில் ஆட்டம் கண்ட அஜய் தேவ்கனின் ‘ரன்வே 34’.. தொடர்ந்து டப் கொடுக்கும் KGF-2.!

Author: Rajesh
5 May 2022, 10:47 am

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்த ‘கேஜிஎப் 2’ திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது.
இந்த படம் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று, வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்த வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த சாதனை படைத்தது.

தொடர்ந்து, 2 வாரங்களில் உலக அளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை மேல் சாதனைப் படைத்து வருகிறது. இதனிடையே அஜய் தேவ்கன் மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த வாரம் ‘ரன்வே 34’ திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தால் ‘கேஜிஎப் 2’ படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கையும் குறையும் எனவும் இப்படத்தின் வசூல் குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ‘ரன்வே 34’ படத்தின் வரவேற்பு சுமாராக இருந்ததால் அது ‘கேஜிஎப் 2’ படத்தை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ‘கேஜிஎப் 2’ படத்தைப் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி உள்ளார்கள்.

இதனால் ‘ரன்வே 34’ படத்தின் வசூல் 40 சதவீதம் குறைந்துள்ளது. 6 நாளில் வெறும் ரூ.21 கோடி வசூல் மட்டுமே பெற்றுள்ளது. ‘கேஜிஎஃப் 2’ படத்தின் வசூல் வேட்டையை பார்த்து இந்தி திரையலகமே மிரண்டு போய் உள்ளது.

  • vadivelu trying to hit the car of goundamani and senthil car கவுண்டமணியின் காரை இடிக்க வந்த வடிவேலுவின் கார்! இப்படியெல்லாம் நடந்துருக்கா?