‘உடம்புக்கு நல்லது’ எல்லாரும் ரேஷன் அரிசி சாப்பிடுங்க நானும் சாப்பிடுவேன்.. அமைச்சர் அட்வைஸ்..!
Author: Vignesh5 August 2024, 5:11 pm
அனைவரும் ரேஷன் அரிசி சாப்பிடுங்க நானும் சாப்பிடுவேன் மாவட்ட ஆட்சியரும் இனி ரேஷன் அரிசி தான் சாப்பிடுவார் உடம்புக்கு ரொம்ப நல்லது. ஊராட்சி தேர்தல் மக்களின் கருத்து கேட்பதற்கு பின்பு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேட்டி அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு கலைஞரின் கனவு இல்லம் கட்டும் பயனாளிகளுக்கு கட்டுமான பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுமார் 1000க்கும் மேற்பட்ட ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
விழாவில், பேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலைஞரின் கனவு இல்லமான குடிசைகளில் இருக்கும் வீடு இல்லாத வேலை குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கும் திட்டம் தமிழக முதல்வர் மூலம் துவக்கப்பட்டு தற்போது, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று 1256 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடு திட்டம் கட்ட ஆணை வழங்கி உள்ளோம். அதேபோல், ஆத்தூர் தொகுதி முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், ஊராட்சிகளில் வரும் நவம்பர் 5-ஆம் தேதி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. முடிவடைந்த பின்பு பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு ஆய்வு நடத்தி பெரிய ஊராட்சிகளை பிரிப்பதற்கும் மேலும் மாநகராட்சி நகராட்சிகளில் அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணியும் உள்ளதால், தற்போதைக்கு ஊராட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்று கூறினார்.