விஜய் அரசியல் குறித்து கொதித்த எஸ்.ஏ சந்திரசேகர்.. செய்தியாளரை வசைபாடி ஓட்டம் பிடித்த தாயார் ஷோபா!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2024, 2:19 pm
உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜயின் தாயார் ஷோபனா அவ்வப்போது வருகை தருவது வழக்கம்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று முறை காஞ்சிபுரத்திற்கு வருகை தந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை திடீரென நடிகர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரும், அவரது மனைவியும் விஜய்யின் தாயாருமான சோபனாவுடன் காஞ்சிபுரம் வந்திருந்து சங்கர மடத்திற்கு வருகை தந்து சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றனர்.
பின்னர் அதனைத் தொடர்ந்து உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்ட அவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்து பிரசாதங்களை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் கோவில் கொடிமரம் அருகே தரையில் விழுந்து வணங்கி வழிபட்டனர். பின்னர் திருக்கோவிலில் இருந்து புறப்பட்ட அவர்களை செய்தியாளர்கள் வீடியோ எடுக்க முற்பட்ட போது நீங்கள் வராதீர்கள், வராதீர்கள் என கூறியபடி நடிகர் விஜய் அம்மா தெறித்து ஓடினார்.
செய்தியாளர்கள் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோதே அவர்களை வசை பாடியபடியே விஜயின் அம்மா ஷோபனா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதனையெடுத்து அவரது பின்னால் வந்த எஸ்ஏ சந்திரசேகரிடம் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் காஞ்சிபுரம் வந்திருப்பது குறித்தும் விஜய்யின் அரசியல் பயணம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டதற்கு, வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் எனது பிள்ளைக்கு எப்போது இருக்கும் என்றார்.
மேலும் முன்பெல்லாம் அரசியலில் உங்களது தலையீடு இருந்ததாகவும் தற்போது இல்லை எனும் எழுந்து வரும் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் கேள்வி கேட்க , “எப்போதும் இருக்கும்” என கூறினார்.
மேலும் படிக்க: உங்க கோரிக்கையை ஏற்க முடியாது.. மீண்டும் கதவை தட்டிய கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் குட்டு!
மேலும் அரசியல் எனும் கடலில் எப்படி விஜய் நீந்தி வருவார் என எதிர்பார்க்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் தான் கோயிலுக்கு வந்திருப்பதாக கூறி நழுவி சென்றார்.