‘ஆப்கானிஸ்தான்’ டீமை யாரும் அப்படி நினைக்காதீங்க..சச்சின் போட்ட உணர்ச்சிகரமான பதிவு..!

Author: Selvan
27 February 2025, 9:05 pm

ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது,அதில் இந்தியா ஆடும் ஆட்டங்கள் மட்டும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் நாக் அவுட் ஆட்டங்கள் விறு விறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில் நேற்று பிப்ரவரி 21 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி நேரடியாக தொடரை விட்டு வெளியேறிவிடும் என்பதால் ஆட்டம் ஆரம்பித்த முதலே பரபரப்பாக சென்றது.

இதையும் படியுங்க: பேயுடன் மல்லுக்கட்டும் ஜி.வி.பிரகாஷ்…கொல நடுங்க வைக்கும் ‘கிங்ஸ்டன்’ பட டிரைலர்.!

அதன் படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக ஆடி 325 ரன்களை குவித்தது,அந்த அணியில் இப்ராஹிம் தன்னுடைய அசத்தலான பேட்டிங்கால் சதத்தை பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல் பல சாதனைகளையும் பதிவு செய்தார்,அதன் பிறகு ஆடிய இங்கிலாந்து அணி 317 ரன்களை குவித்து வெற்றிக்கு அருகே வந்து தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் திரில்லிங் வெற்றி பெற்றதோடு தொடரை விட்டு வெளியேறாமல் உள்ளது.ஆஃப்கானிஸ்தானின் இந்த வெற்றியை பலரும் பாராட்டி வரும் நிலையில்,இந்திய முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய X தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் நிலையான எழுச்சி ஊக்கமளிப்பதாக உள்ளது,அவர்கள் வெற்றி பெறுவதை ஆச்சரியமாக யாரும் பார்க்க வேண்டாம்,இப்போது வெற்றி பெறுவது அவர்களுக்கு பழக்கமாகிவிட்ட்டது என்று தெரிவித்துள்ளார்,மேலும் இப்ராஹிம் மற்றும் ஓமர் சாய் அற்புதமாக செயல்பட்டார்கள் என்று கூறியுள்ளார்,சச்சினின் இந்த பதிவு ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?