தியாகி இமானுவேல் சேகரனார் திருவுருவப் படத்தின் மீது பெட்ரோல் குண்டுவீச்சு… மீனாட்சிபட்டியில் பரபரப்பு… வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 1:38 pm

தூத்துக்குடி ; தூத்துக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று இரவு நான்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர்.

இந்த காட்சி அருகில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி சாலையில் திரண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை சேதப்படுத்திய அருகில் உள்ள அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 353

    0

    0