தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உடன் சத்குரு சந்திப்பு!
Author: Udayachandran RadhaKrishnan8 February 2025, 11:13 am
தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்களை சத்குரு நேற்று முன்தினம் (06/02/2025) சந்தித்தார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு அவர்கள் “திரு. ரேவந்த் ரெட்டி அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, தெலுங்கானாவிற்கு செழிப்பைக் கொண்டு வருவது மற்றும் ஹைதராபாத்தை உலகளாவிய இடமாக மாற்றுவது குறித்த அவரின் தொலைநோக்குப் பார்வை உண்மையில் ஊக்கம் அளிப்பதாக உள்ளது” எனக் கூறியுள்ளார்
அதே போன்று இந்த சந்திப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அவர்கள், “ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், புகழ்பெற்ற ஆன்மிகவாதியான சத்குரு அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்” எனப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.