மக்கள் வெள்ளத்தில் “சத்குரு”…7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கோவை வருகை..!

Author: Selvan
14 December 2024, 9:47 pm

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

ஏழு மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து திரும்பிய சத்குருவிற்கு கோவை விமான நிலையம் முதல் ஈஷா யோக மையம் வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

Coimbatore Airport Sadhguru Reception

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து மலர்தூவி, விளக்கேந்தி ஆரத்தி காட்டி வரவேற்றனர்.பின்பு அவிநாசி சாலையில் உள்ள ஆர்ய பவன் அருகே பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து ரேஸ் கோர்ஸ் சாலையில் பாரம்பரிய வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படியுங்க: ஓரினச்சேர்க்கை ஆசை.. பறிபோன சிறுவனின் உயிர்.. கோவில்பட்டி வழக்கில் திருப்பம்!

இதனைத்தொடர்ந்து காளம்பாளயம்,மாதம்பட்டி,செம்மேடு வழியாக ஈஷா யோகா மையத்தினை அடைந்தார்.

Grand Welcome for Sadhguru

ஈஷா யோக மையத்தின் நுழைவாயிலான மலைவாசலில் பழங்குடி மக்கள் பாரம்பரிய இசை மற்றும் நடனம் புரிந்து வான வேடிக்கைகளுடன் சத்குருவை வரவேற்றனர்.ஆதியோகி முன்பாக திரண்டிருந்த 10,000-க்கும் மேற்பட்டோர் 1,00,008 அகல் விளக்குகளை ஏற்றி, தேவாரம் பாடி,பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள்.

கடைசியாக அங்கே கூடி இருந்த மக்கள் முன்னாள் சத்குரு உரை நிகழ்த்தினார்.சத்குருவின் வருகையால் கோவை மக்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?